பக்கம் எண் :

700திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


628. நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே. 6

629. வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே. 7

_______________________________________________

களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.

கு-ரை: கரவீரத்தை நண்ணுவார்வினை நாசமாம் என்கின்றது பண்ணின் ஆர் மறை - சத்தத்தோடு கூடிய வேதம்.

6. பொ-ரை: ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும். அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத் தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

கு-ரை: இத்தலத்தைத் தொழுவார்க்குத் துக்கம் இல்லை என்கின்றது. நிழலின் ஆர் மதி - ஒளி நிறைந்த பிறை.

7. பொ-ரை: தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடைய வரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூர விலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.

கு-ரை: அடியார்மேல் துயரம் தூரமாம் என்கின்றது. வண்டர் - தீயோர்களாகிய முப்புராதிகள். அழல்போல் ஒளிர் கண்டனார் - விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தையுடையவர். துயர் தூரமே -துன்பம் தூரவிலகும்.