60. திருத்தோணிபுரம்
பண்: பழந்தக்கராகம்
பதிக எண் ; 60
திருச்சிற்றம்பலம்
645. வண்டரங்கப் புனற்கமல
மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு
மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர்
திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை
பரிந்தொருகாற் பகராயே. 1
__________________________________________________
பிரிவாற்றாத தவைவி வண்டு
முதலியவற்றைத் தூதாக அனுப்புவதாக அகப்பொருள்
துறையில் இத்திருப்பதிகம் அமைந்துள்ளது.
1. பொ-ரை: வளமையான அலைகளோடு கூடிய
நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின்
விளைந்த தேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு
களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அயைும்
நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு
கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற்
சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப்
பூண்டமார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில்
பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம்
எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும்
பகர்வாயாக.
கு-ரை: பிரிவாற்றாமையால்
பேதுறுகின்ற தலைவி, தன் நிலை மையை உணர்த்த
வண்டைத் தூதாக அனுப்பக்கருதி, அதனைப் பார்த்து
வேண்டுகின்றான். வண் தரங்கம் - வளப்பமான அலை.
தரங்க இசை - அலைபோல் அசைகின்ற இசையின்
ஆலத்தி, அளி - வண்டு. மதியத்துண்டர் -
பிறைத்துண்டை அணிந்தவர். அங்கப் பூண் - எலும்
பாகிய ஆபரணம். பண்டரங்கன் - கூத்தை ஆடுபவன்.
பதினொருவகைக் கூத்தினுள் சிவபெருமான்
திரிபுரத்தையழித்தபோது வெண்ணீறணிந்து
ஆடியகூத்து, தான் ஏவுந்தொழிலுக்கு உடந்தையாய்
இருக்க அளி அரசே எனச் சிறப்பித்து அழைத்தாள்.
பெடையி
|