பக்கம் எண் :

714திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


646. எறிசுறவங் கழிக்கான

லிளங்குருகே யென்பயலை

அறிவுறா தொழிவதுவு

மருவினையேன் பயனன்றே

செறிசிறார் பதமோதுந்

திருத்தோணி புரத்துறையும்

வெறிநிறார் மலர்க்கண்ணி

வேதியர்க்கு விளம்பாயே. 2

_______________________________________________

னொடும் இசைபாடும் அளி என்றதனால், பிரிவுத்துன்பம் அறியாமையால், அழைத்து உணர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிலும் மது மாந்தி மயங்கியவர்களுக்கு, காதல் வாழ்க்கையில் களித்து இருப்பவர்களுக்கு உணர்த்தினாலல்லது தானே உணரும் ஆற்றல் இல்லை என்பதையும் அறிவித்தவாறு. பெடையோடு இருக்கும் அளியை மூன்றாமவளாகிய தான் பார்த்தமையால் உடன் உறைவு இனிக் கூடாது. என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையையும் குறிப்பித்தாள். இசைபாடும் அளியாதலின். தோணிபுரநாதரை உன் இசை முதலில் வசப்படுத்த, என்னிலைமையை எடுத்தியம்ப உனக்கு இனியவாய்ப்புக் கிட்டுமென்று உணர்த்தினாள். காதலனோடு களித்திருக்கும் பெடைவண்டு, பெண்கள்படும் பிரிவுத் துன்பத்தை நன்கு முன்னர் அறியுமாயின், அதனைக் தனித்து மற்றொரு தலைவனிடத்து அனுப்புதல் மரபு அன்றாகலின் அளி அரசே என ஆண்வண்டை விளித்தாள். நீ செல்லினும் என்னிலைமை உணர்த்தக் கூடிய அளவிற்கு அவகாசம் இராதென்பாள் பண்டரங்கற்கு என்றாள். கூத்தில் ஈடுபட்டவர்க்குக் கேட்பதற்கு அவகாசம் ஏது? இத்தனை நயங்கள் இப்பாடலில் பொதிந்து ஆன்மாவின் பெண்மைத்தன்மையை மிகுதிப்படுத்தி, இறைவனாகிய தலைவனின் இன்றியமையாமையை உணர்ந்து இடையறாப் பேரன்பாகிற வண்டைத் தூதனுப்புகின்ற நிலை மிக அறிந்து இன்புறுதற்கு உரியது. அளி என்பது அன்பிற்கும் ஒரு பெயராதல் காண்க,

பொ-ரை : எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங் கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்குரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி. பதமந்திரங்களை ஓதிப்