பக்கம் எண் :

 60. திருத்தோணிபுரம்715


647. பண்பழனக் கோட்டகத்து

வாட்டமிலாச் செஞ்சூட்டுக்

கண்பகத்தின் வாரணமே

கடுவினையே னுறுபயலை

செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ்

திருத்தோணி புரத்துறையும்

பண்பனுக்கென் பரிசுரைத்தாற்

பழியாமோ மொழியாயே. 3

__________________________________________________

பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரு0ம் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக.

கு-ரை: வண்டின் இன்னிசை அங்கு ஓதப்படும் வேத ஒலியில் இறைவன் காதில் வீழாது என்பதை உணர்ந்த தலைவி, தாலை போல் பெருங்குரல் இடும் குருகைத் தூதனுப்ப எண்ணி, என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் என் வினைப்பயன் தான்; ஆயினும் அவர்க்கு நீ சொல்லு என்று தூதனுப்புகின்றாள். சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை - பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறி சிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். நீ இளங்குருகாயிருந்தும் என் நோய் அறியாதது என் வினைப்பயன் என்றாள்.

3. பொ-ரை: பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பகமரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.

கு-ரை: இளங்குருகும் இவள் துன்பத்தை அறியாதாகவே, கோழியை விளித்துக் கூறுகிறாள். நற்பண்புடைய நாயகனுக்கு என் தன்மை உரைத்தால் உனக்குப் பழியாவந்துவிடும் என வேண்டுகிறாள். பழனம் - வயல், கோடு - கரை. சூட்டு - உச்சிக் கொண்டை.