48-6. அருச்சுனன் செய்த தவத்தைக்கெடுத்து
அவனைக் கொல்ல வந்த மூகாசுரன் என்னும் பன்றியைக்
கொன்று, அருச்சுனனுடைய போர் வன்மையைப் பார்வதிக்குக்காட்டி
அவனுக்கு இறைவன் அருள்செய்த செய்தி பாரதத்தில்
உள்ளது.
56-1. ஆதி முதல்வர் - ஆதி முதல்வர்
என்பது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக்
குறிக்கிறது - திருப்பாற்றுறைச் செய்தி.
62-9. பாணனிசை பத்திமையால்
பாடுதலும் பரிந்தளித்தான் - இது பாணபத்திரன் வரலாறு
எனப்படுகிறது - பெரியபுராணம்.
63. சீகாழியின்
பன்னிரு பெயர்களும் சீகாழித் தலபுராணச் செய்திகளாக
உள்ளன.
83-6. அம்பர்மாகாளத்து இறைவர் நஞ்சை
உண்டு களித்தவர் - இவர் பெயர் காளகண்டேசுவரர்
என்பது தலபுராணம். இவையன்றி, 101-5,7;
105-9,10; 114-6; 120-3; 21-5 போன்ற இடங்களிலும்
புராணச் செய்திகளை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
9. அருஞ்சொற்பொருள்:
2-2. குழை - பனந்தோட்டால் செய்யப்படும்
மகளிர்காதணி. ஆடவர் காதில் செருகிக் கொள்ளும்
மணத்தழை.
2-7. வெள்ளம் ஆர்ந்துமதிசூடி -
தருக்கினாரை ஒடுக்கித் தாழ்ந்தாரை உயர்த்தி.
3-7. வருகாமன் - தேவகாரியத்தை
முடிப்பதற்காக இந்திரன் கோபத்துக்கு ஆளாகி இறப்பதனைக்
காட்டிலும் சிவபெருமான் மறக்கருணையால் உய்வேன்
என்று விரும்பிவந்த காமன்.
3-11. வானத்திலும் உயர்வர் -
பெருமானை இசைபாட வல்லார்க்கு, வானத்தின்பம்
ஒருபொருளாகத்தோன்றாது ஆதலின் வானத்திலும் உயர்வர்
என்றார்.
4-5. வெந்த வெண்ணீறு - இனிவேதற்கு
இல்லாத - மாற்றமில்லாது ஒருபடித்தான வெண்ணீறு.
|