4-7. காம்பு - முள்
இல்லாத மூங்கில்.
5-11. பாடல் மாலை - ஒவ்வொரு திருப்பாடலுமே
தனித்தனிப்பயனுடையதாய், வழிபடும் முறைகளை
உடையதாய் இருக்கும் சிறப்புநோக்கி ஒவ்வொரு
பாடலுமே ஒரு மாலை போன்றது.
6-2. மூவெரி காவல் ஓம்பும் - அந்தணர்கள்
மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே பாதுகாக்க வேண்டியது
மரபு ஆதலின் மூஎரி காவல் ஓம்பும் மறையாளர் என்றார்.
6-6. புனை அழல் -
சாதகன்மம் முதலான பதினாறு கிரியைகளாலும் அழகு செய்யப்பட்ட
யாகாக்கினி.
6-9. மந்திர வேதங்கள் - மந்திரவடிவான
வேதங்கள். அவை இருக்கு வேதத்தில் வழிபாட்டு
மந்திரங்களும், யசுர் வேதத்தில் பிரயோகங்களும்
சாமவேதத்தில் கானங்களுமாக அமைந்தன.
7-3. யார்க்கும் நண்ணல் அரிய நள்ளாறு
- நாடிழந்தும், நகரிழந்தும் மனைவியையிழந்தும்
உருமாறியும் வினையை நுகர்ந்து கழித்த நளன்
போன்றார் அன்றி வினைச் சேடமுடைய எவரும் நணுக
முடியாத நள்ளாறு.
8-7. நீறுடையார் -
தாம்தொன்மைக்கெல்லாம் தொன்மையாய் இருத்தலைத்
தோற்றுவிக்கச் சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத்
திருமேனியிலணிந்தவர்.
10-4. எதிரும்பலி - பிச்சை ஏற்பார்
யாசியாது தெருவில் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல்
மரபாதலின் அதனை விளக்க எதிரும்பலி என்றார்.
10-7. கரிகாலன - எரிபிணத்தை நுகர
எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களை உடையன.
10-9. தளராமுலை - உண்ணத்தளர்தல் நகிற்கு
இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளரா முலை என்றார்.
11-5. ஆயாதன சமயம் பல - இறை உண்மையையும்
இறை இலக்கணத்தையும் அளவையானும் அநுபவத்தானும் உள்ளவாறு
|