பக்கம் எண் :

74முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


ஆராயாதனவாகிய சைவம் ஒழிந்த ஏனைய சமயம்.

11-6. எல் ஆம் ஒருதேர் - ஒளிப்பொருள்களாகிய சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக அமைந்த ஒருதேர்.

18.11. குன்றாத்தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.

21-5. மலர்மிசை எழுதருபொருள் - பிரமரந்தரத்தின் கண்ணதாகிய சகஸ்ர தளத்தை உடைய தாமரை மலர்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப் பிழம்பாகிய பொருள்.

24-3. கானமான் - சாதி அடை. இறைவன் கையில் உள்ளது காட்டு மான் அன்று.

27-8. மலையதனார் - சண்டையிடுதற்குரிய முப்புராதிகள்.

27-9. நாடவல்லமலரான் - பிரமனுக்கு நான்கு முகங்கள் ஆதலின் திரும்பித் திரும்பித் தேடவேண்டிய அவசியமில்லை என்று நகைச்சுவை தோன்றக் கூறியது.

29-2. ஆகம் வீடும் மறையோர் - வினைவயத்தான் வந்த உடலை விடுத்து முத்தி எய்தும் அந்தணர்.

32-7. திமில் - வேங்கை மரம்.

33-2. கிடை ஆர் ஒலி - மாணவர்கள் கூட்டமாயிருந்து ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தை கூறுதல் என்ப.

33-9. சுணங்கு - பிரிந்த பெண்களுக்கு உண்டாகும் தேமல்.

36-3. கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ

45-3. பொழில், சோலை: பொழில் - பொழில் இயற்கையே வளர்ந்த காடு. சோலை - வைத்து வளர்க்கப்பட்ட பூங்கா.

47-6. மூன்று வேள்வியாளர் - தேவயஜ்ஞம், பிதிர்ஜ்யஜ்ஞம், ருஷியஜ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.