47-7. பொறைபடாத இன்பம் - பொறுக்க
முடியாத அளவு கடந்த இன்பம்.
48-1. அருமறை - அரிய
அநுபூதி நிலையாகிய இரகசியம்.
48-5. ஐவேள்வி - தென்புலத்தார்,
தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற
ஐவருக்கும் செய்யப்படும் வேள்வி.
50-7. ஆயம் ஆய -
படைக்கப்பெற்ற.
53-5. மொந்தை, தக்கை - மொந்தை
- ஒருமுகப்பறைவகைகளில் ஒன்று.
தக்கை - இருமுகப்பறை வகைகளில் ஒன்று.
(உடுக்கையும் ஆம்)
53-6. சழிந்த - நெருங்கிக்
கிடக்கின்ற.
53-9. மூலம் உண்ட நீற்றர் - மூலமலமாகிய
ஆணவத்தின் வலிகெடுத்த திருநீற்றினை உடைய அடியவர்கள்.
54-1. பூத்தேர்ந்து - வண்டு, ஈக்கடி,
எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை
ஆராய்ந்து
54-4. தோட்டீர் - செங்காந்தள் பூவை
அணிந்தவரே.
57-9. பரக்கினார் -
அலைந்து திரிந்தவர்களாகிய அயனும் மாலும்.
விரக்கினான் - சாமர்த்தியம்
உடையவன். விரகினான் எதுகை நோக்கி விரிந்தது.
59-1. ஒடுங்கும் பிணி - தமக்குரிய
பருவம் வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கி
இருக்கும் நோய்.
59-10. பகடு ஊர்பசி -
யானைத்தீப்பசி.
64-4. செடி ஆர்வைகை -
புதர்நிறைந்த வைகை.
|