பக்கம் எண் :

76முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


65-5. விழைவு, காதல் - விழைவு - பற்று, காதல் - பற்று முற்றி இன்றியமையாத்தன்மையில் எழுந்த விருப்புள்ளம்.

66-3. தாராபகன்றில் - தாரா - சிறுநாரை, பகன்றில் - அன்றில்.

67-6. ஈளைப்படுகு - உலராத சேற்றோடு கூடிய ஆற்றுப்படுகை.

68-6. மூதார் - முனிவர் - மிக ஆண்டு மூத்த முனிவராகிய சனகாதியர்.

70-7. தலையார்கமலம் - தலைமை பொருந்திய தாமரை.

71-10. கபாலம் அயல் பொழிய - கறவைப் பாத்திரம் நிறைந்து வழிய.

77-7. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமே அன்றிப்பூவும் சூடப்பெறும் என்பது அறிவிக்கப்பட்டது.

83-2. ஆனான் - இடபத்தை உடையவன்.

86-8. தீபமனத்தார் - எழுதிய தீபம் போல நிலைத்த மனத்து அடியார்கள்.

98-1. சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவதுபோல, வந்து அடையாத இயற்கையே ஆனதிரு.

103-4. துணையல் - இரண்டு இரண்டாக மலர்களைச் சேர்த்துக்கட்டும் மாலை. கணையல் செய்தல் - அம்பு எய்தல்.

104-10. அந்தர ஞானம் - இடையீடுற்ற ஞானம்.

107-10. கட்டுரை - கட்டிக் (கற்பனை செய்து) சொன்ன பொய்மொழி. இதுபோன்று அருஞ்சொல் விளக்கங்கள் பல இவ்வுரையுள் காணப்படும்.