பக்கம் எண் :

736திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


673. கன்னவிலு மால்வரையான்

கார்திகழு மாமிடற்றான்

சொன்னவிலு மாமறையான்

றோத்திரஞ்செய் வாயினுளான்

மின்னவிலுஞ் செஞ்சடையான்

வெண்பொடியா னங்கையினில்

கொன்னவிலுஞ் சூலத்தான்

கோளிலியெம் பெருமானே. 7

674. அந்தரத்திற் றேரூரு

மரக்கன்மலை யன்றெடுப்பச்

சுந்தரத்தன் றிருவிரலா

லூன்றஅவன் உடல்நெரிந்து

_______________________________________________

கு-ரை: உலகத்தைத் தாவியளந்த திருமாலும் காணாத தற்பரன், பொறிகளையடக்கி அன்புசெய்த நமிநந்தியடிகளுக்குப் புகழைத்தந்த பெருமான் இவர் என்கின்றது. தாவியவன் - மூவுலகத்தையும் ஈரடியால் தாவியளந்த திருமால். காணாத தற்பரனை - நாயகனாகவும், ஊர்வோனாகவும், ஆண்டானாகவும், மைத்துனனாகவும், கண்டதன்றித் தற்பரன் என்று காணப்படாதவற்றிற்கெல்லாம் மேலானவனை.

7. பொ-ரை: கற்கள் செறிந்த பெரிய கயிலாய மலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச் செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கும் எம்பெருமானாவான்.

கு-ரை: கயிலையையுடையவன், நீலகண்டன்; வேதங்களையுடையவன்; தோத்திரஞ்செய்யும் வாயில் உள்ளவன்; செஞ்சடையான்; வெண்பொடியான்; சூலத்தான் இவன் என்கின்றது. கல் நவிலும் மால்வரை எனப் பிரிக்க. கார் - கருமைநிறம். கொன் - பெருமை.

8. பொ-ரை: ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால்