பக்கம் எண் :

 63. திருப்பிரமபுரம்743


679. பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப்

பெய்பலிக் கென்றயலே

கயலார்தடங்க ணஞ்சொனல்லார்

கண்டுயில் வவ்வுதியே

இயலானடாவி யின்பமெய்தி

யிந்திரனாண் மண்மேல்

வியலார்முரச மோங்குசெம்மை

வேணு புரத்தானே. 2

__________________________________________________

னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?

கு-ரை: பிரமபுரத்தானே! ஒருகையில் மழுவையும், ஒருகையில் கபாலத்தையும் ஏந்திக்கொண்டு மகளிரிடம் பிச்சை வாங்காது அவர்கள் அழகை வாங்குகிறீரே ஏன் என்று வினாவுகிறது.

எரியார் மழு - எரிதலைப் பொருந்திய மழு. வரியார் வளையார் - கோடுகளோடு கூடிய வளையலையுடைய முனிபத்தினியர். ஐயம் - பிச்சை. சரியா நாவின் என்பது முதல் பிரமன் என்பதுவரை பிரமனைக் குறிக்கும் தொடர். பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனத் தலத்திற்குப் பெயர் வந்தமை விளக்கியது.

2. பொ-ரை: இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரக நோய்ப் படுத்தல் நீதியோ?

கு-ரை: வேணுபுரத்தானே! சடையிற் சந்திரனையும் சூடிப்பிச்சைக்கென்று புறப்பட்டு மகளிர் துயிலை வவ்வுவதேன் என்கின்றது.

பெயல் - கங்கை. திங்கள் - பிறை. கயல் ஆர் - கயல் மீனை