680. நகலார்தலையும் வெண்பிறையு
நளிர்சடை மாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய்
பாய்கலை வவ்வுதியே
அகலாதுறையு மாநிலத்தில்
அயலின்மை யாலமரர்
புகலான்மலிந்த பூம்புகலி
மேவிய புண்ணியனே. 3
__________________________________________________
ஒத்த. நல்லார் - பெண்கள். கண் துயில்
வவ்வுதியே என்றது விரக நோயால் அவர்கள் துயில் துறந்தார்கள்
எனக் குறித்தது.
இயலான் நடாவி - முறைப்படி நடத்தி. இந்திரன்
ஆள் மண் மேல் - இந்திரன் வந்து மறைந்திருந்தாண்ட
மண்ணுலகத்தில். வியல் - அகலம். இந்திரன் மூங்கிலாய்
மறைந்திருந்தமையின் வேணுவனமாயிற்று எனக் காரணங்
குறித்தது.
3.
பொ-ரை:: இம்மாநிலத்தில்
தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால்
தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும்,
அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில்
மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண்மையான
பிறை மதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில்
பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப்
பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து,
அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி
செய்து போதல் நீதியோ?
கு-ரை: இவ்வுலகத்தில் அடைக்கலத்தானம்
வேறில்லாமையால் அமரர்கள் வந்து அடைக்கலம் புகுந்த
புகலிமேவிய புண்ணியனே! கலையைக்கவர்ந்ததேன் என்கின்றது.
நகல் - சிரித்தல். பகலாப் பலி - நடுவற்றபிச்சை;
பகற்காலத்துப்பலி என்றுமாம். ஐயம் - பிச்சை;
பாய் கலை - பரந்த ஆடை.
அயல் இன்மையால் - (அடைக்கலம்) வேறின்மையால்.
புகல் - அடைக்கலம். புகலி என்பதற்குத் தேவர்களால்
அடைக்கலம் புகப் பெற்ற இடம் எனக் காரணம்
விளக்கியவாறு.
|