பக்கம் எண் :

 63. திருப்பிரமபுரம்745


681. சங்கோடிலங்கத் தோடுபெய்து

காதிலொர் தாழ்குழையன்

அங்கோல்வளையா ரையம்வவ்வா

யானலம் வவ்வுதியே

செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ்

செய்வினை மெய்தெரிய

வெங்கோத்தருமன் மேவியாண்ட

வெங்குரு மேயவனே. 4

682. தணிநீர்மதியஞ் சூடிநீடு

தாங்கிய தாழ்சடையன்

பிணிநீர்மடவா ரையம்வவ்வாய்

பெய்கலை வவ்வுதியே

_______________________________________________

4. பொ-ரை: கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித் தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?

கு-ரை: வெங்குருமேயவனே! தோடும் குழையும் காதிற்பெய்த உமையொருபாதியனாகிய உருவத்தைக்கொண்டு மகளிரிடம் ஐயம் பெறாது நலங்கவர்ந்தது ஏன் என்கின்றது. சங்கோடு இலங்க - சங்க குண்டலத்தோடு விளங்க. அம் கோல் வளையார் - அழகிய திரண்ட வளையலையுடையவர்கள். ஐயம் வவ்வாயால் - பிச்சையை ஏற்காய். நடாவி - நடத்தி. வெங்கோ தருமன் செங்கோல் நடாவிச் செய்வினை பல்லுயிர்க்கும் மெய்தெரிய மேவி ஆண்ட வெங்குரு எனக் கூட்டுக. தருமன் செங்கோல் முறைப்படி பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறிய வெங்குரு எனப் பெயர் பெற்றது எனக் காரணம் விளக்கியது.

5. பொ-ரை: மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங்களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம்