அணிநீருலக மாகியெங்கு
மாழ்கட லாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த
தோணி புரத்தானே. 5
683. கவர்பூம்புனலுந் தண்மதியுங்
கமழ்சடை மாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா
யானலம் வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாய
வடன்மன்ன னாண்மண்மேல்
தவர்பூம்பதிக ளெங்குமெங்குந்
தங்கு தராயவனே. 6
__________________________________________________
தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும்
அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து
இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை
நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும்
சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர்
பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின்
ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா ?
கு-ரை: உலகம் கடலுள் ஆழ்ந்தகாலத்து
மிதந்த தோணிபுரத்தானே! மகளிரிடம் ஐயம் ஏற்காது
உடுத்த ஆடையை வவ்வியதேன் என்கின்றது. தணிநீர்
மதியம் - கீழ்ப்படிந்த தன்மையை உடைய பிறை பிணிநீர்
மடவார் - காமநோய்வாய்ப்பட்ட மாதர்கள். ஐயம் -
பிச்சை. பெய்கலை உடுத்திய ஆடை. உலகம் எங்கும் அணி
நீராகிக் கடலால் அழுங்க எனக் கூட்டுக. துணி நீர்
பணிய - துணிவு கொண்ட தண்ணீர் கீழ்ப்படிய. தோணிபுரம்
என்ற பெயரின் காரணம் விளக்கியது.
6. பொ-ரை: அணிகலன்களை அணிந்த
அரசர்களாகிய அவர்க்கெல்லாம் தலைவனாகிய வலிமை
பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில்
இரண்ய கசிபுவைக் கொன்ற பழி நீங்கப் பூசித்து ஆட்சி
செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா
இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில்
எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவர வந்த அழகிய
கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச்
சூடி மகளிர் அருகருகே
|