பக்கம் எண் :

750திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


688. கட்டார்துழாயன் றாமரையா

னென்றிவர் காண்பரிய

சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய்

செய்கலை வவ்வுதியே

நட்டார்நடுவே நந்தனாள

நல்வினை யாலுயர்ந்த

கொட்டாறுடுத்த தண்வயல்சூழ்

கொச்சை யமர்ந்தவனே. 11

__________________________________________________

அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப் பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?

கு-ரை: காழியமர்ந்தவனே, வளைகவர்ந்தனையே என்கின்றது. கோல் - திரட்சி. அழலாய் - வெதும்பி. கவ்வை - துன்பம். ஐந்தலை நீள்முடிய கழல் நாக அரையன் - ஐந்து தலையோடும் முடியோடும் கூடிய வீரக்கழலை அணிந்த காளிதன் என்னும் பாம்பு.

11. பொ-ரை: ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழி போகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத்தையும் அளித்து அம்முனிவனை வாழச் செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?

கு-ரை: திருமாலும் பிரமனும் காணுதற்கரிய சிட்டராய்ப் பலி கொள்ளாது கலைகொள்ளக் காரணம் ஏன் என்கின்றது. கட்டு ஆர் துழாயன் - கட்டுதல் பொருந்திய துளசிமாலையையுடைய திருமால். சிட்டார் - ஒழுங்கினையுடையவர். கலை - ஆடை. நட்டாறு என்பது நட்டார் என ஆயிற்று. நந்தன் - பிரமன் மகனாகிய பராசரன். ஆள - மச்சகந்தியைப் பெண்டாள. (அப்பழி போம்படி) நல்வினையால் -