686. துவர்சேர்கலிங்கப்
போர்வையாருந்
தூய்மை யிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங்
காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா
யானலம் வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச்
சண்பை யமர்ந்தவனே. 9
687. நிழலான்மலிந்த கொன்றைசூடி
நீறுமெய் பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய்
கோல்வளை வவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர
வைந்தலை நீண்முடிய
கழனாகரையன் காவலாகக்
காழி யமர்ந்தவனே. 10
__________________________________________________
9. பொ-ரை: உடலைத் துளைக்கும்
நீண்ட வேலை உடைய இயமனை அடக்கி ஆளச் சண்பையில்
எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப்
போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து
உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய்
மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை
உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க,
அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது
அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது
நீதியோ?
கு-ரை: புறச்சமயிகள் மனந்தேராது
உழலச்செய்ததுபோல மகளிர் நலத்தையும் கொண்டனையே
என்கின்றது. கலிங்கப் போர்வை - கலிங்கநாட்டில்
நெய்த போர்வை. கவர்செய்து - மனந்திரிந்து.
காரிகை - அழகு. தவர்செய் நெடுவேல் சண்டன் ஆள -
துளைக்கின்ற நீண்ட வேலை ஏந்திய யமனை அடக்கி
ஆள. இது மார்க்கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாற்றை
உட்கொண்டது.
10. பொ-ரை: உலகம் அழலாக
வெதும்பி வருந்திய துன்பம் தீருமாறு ஐந்து
தலைகளையும் நீண்ட முடியையும் வீரக் கழலையும்
|