பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப்
பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற
தென்றிருப் பூவணமே. 3
693. கடியாரலங்கற் கொன்றைசூடிக்
காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த
கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும்
பல்புகழாற் பரவச்
செடியார்வைகை சூழநின்ற
தென்றிருப் பூவணமே. 4
__________________________________________________
பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து
வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.
கு-ரை: யானையை யுரித்துப்போர்த்து,
பொடியணிந்து, நஞ்சுண்டு விளங்கும் கண்ணுதற் பெருமானூர்
இது என்கின்றது.
போர் ஆர் மதமா - சண்டைசெய்யும் மதயானை.
உரிவை - தோல். கண்நுதல் - நெற்றிக்கண்ணையுடையவன்.
பார்ஆர் பூமியிற் பொருந்திய. வாய் -
வாய்க்கால். வாரி - நீர்.
4. பொ-ரை: மணம் பொருந்திய
கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட
குழை அணிந்தவனாய், வெண்மையான விடைக் கொடியைத்
தனக்குரியதாகக் கொண்டவனாய், கோவணம் அணிந்தவனாய்
விளங்கும் சிவபிரானது இடம், நிலவுலக மக்கள்
ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப்
புதர்கள் நிறைந்த வைகை யாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.
கு-ரை: கொன்றையணிந்து, காதில் குழைவிளங்க
இடபக் கொடி ஏந்திய கோவணாண்டி இடம் இது என்கின்றது.
கடி - மணம். அலங்கல் - மாலை. படியார் -
பூமியிலுள்ள மக்கள். செடி ஆர் வைகை - புதர் நிறைந்த
வைகை.
|