பக்கம் எண் :

762திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


704. தாரார்கொன்றை பொன்றயங்கச்

சாத்திய மார்பகலம்

நீரார்நீறு சாந்தம்வைத்த

நின்மலன் மன்னுமிடம்

போரார்வேற்கண் மாதர்மைந்தர்

புக்கிசை பாடலினாற்

பாரார்கின்ற பட்டினத்துப்

பல்லவ னீச்சரமே. 4

705. மைசேர்கண்ட ரண்டவாணர்

வானவ ருந்துதிப்ப

மெய்சேர்பொடிய ரடியாரேத்த

மேவி யிருந்தவிடங்

__________________________________________________

கு-ரை: மங்கை ஓர்பாகத்து இருக்கவும் சடைமேற் கங்கையையும் வைத்த கள்வனிடம் இது என்கிறது. வாள் நிலவு - ஒளி பொருந்திய நிலவு. பொங்கு அயஞ்சேர் புணரி - மிகுந்த பள்ளம் பொருந்திய கடல். அயம் - பள்ளம். ‘அயமிழியருவி‘ என்னுங்கலியிலும் இப்பொருட்டாதல் தெளிக. பங்கயம் - தாமரை.

4. பொ-ரை: மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

கு-ரை: கொன்றைசாத்திய மார்பில் நீறும் சாந்தும் சாத்திய நிமலனிடம், மாதரும் மைந்தரும் பாடலினால் பூமிக்கண் இன்பம் நுகரும் தலமாகியது இது என்கின்றது. தாரார் கொன்றை - மாலையாகவே பூக்கும் கொன்றை. போரார் வேற்கண் - போரில் பொருந்திய வேல் போலும் கண்.

5. பொ-ரை: கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடையவரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறு பூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம்