பக்கம் எண் :

 65. காவிரிப்பூம்பட்டினத்துத்763


கைசேர்வளையார் விழைவினோடு

காதன்மை யாற்கழலே

பைசேரரவா ரல்குலார்சேர்

பல்லவ னீச்சரமே. 5

706. குழலினோசை வீணைமொந்தை

கொட்ட முழவதிரக்

கழலினோசை யார்க்கவாடுங்

கடவு ளிருந்தவிடஞ்

சுழியிலாருங் கடலிலோதந்

தெண்டிரை மொண்டெறியப்

பழியிலார்கள் பயில்புகாரிற்

பல்லவ னீச்சரமே. 6

_______________________________________________

போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.

கு-ரை: நீலகண்டரும், நீறு பூசியவருமாகிய சிவபெருமான் அடியார்கள் ஏத்த அமர்ந்திருந்த இடம் இத்தலம் என்கின்றது. மை - விடம். மேவி - விரும்பி. கைசேர் வளையாராகிய அல்குலார், ஆசையோடும் காதலோடும் கழலைச்சேரும் பல்லவனீச்சரம் எனக் கூட்டிப் பொருள் காண்க. விழைவு - பற்று. காதல் - பற்றுமுற்றி இன்றியமையாத் தன்மையால் எழுந்த விருப்புள்ளம். பை - படம்.

6. பொ-ரை: குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.

கு-ரை: குழல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க ஆடுங்கடவுள் அமர்ந்த இடம் இத்தலம் என்கின்றது.

மொந்தை என்பது ஒருவகைப் பறையாதலின் கொட்ட என்றார். பயில் புகார் - பழகுகின்ற காவிரிப் பூம்பட்டினம்.