அந்திவண்ணன் றன்னையழகார்
ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார்
சிவகதி சேர்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும்
தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய,
மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை,
ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை
மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.
கு-ரை: சண்பைநகர்ச் சிவபெருமானைப்
பற்றிச் சொன்ன ஞானசம்பந்தனது சொல்லைத் தியானத்தோடு
பாடவல்லார்கள் சிவகதி சேர்வர் என்கின்றது. வந்தி
- வந்தித்தல். வந்தி - அடியவருடைய வந்தித்தல், முதல்
நிலைத் தொழிற்பெயர். மறை - இரகசியம். சந்தி -
காலை மாலை. இறைவன் பூசைக்காலமல்லாத காலங்களில்
அம்மையோடு, வேதவிசாரணை செய்து சந்தியா காலங்களில்
சமாதி செய்கின்றார் என்ற அநுபவம் அறிவிக்கப்படுகிறது.
திருப்புகழ்
சைவமுதற்
குருவாயே
சமணர்களைத் தெறுவோனே
பொய்யர் மனத்
தணுகானே
புனிதஅருள் புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா
கடிகமழ்அற் புதலீலா
தெய்வதசற் குருநாதா
திருமதுரைப்
பெருமாளே.
- அருணகிரிநாதர். |
|