பக்கம் எண் :

772திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


720. போதியாரும் பிண்டியாரும்

புகழல சொன்னாலும்

நீதியாகக் கொண்டங்கருளு

நிமல னிருநான்கின்

மாதிசித்தர் மாமறையின்

மன்னிய தொன்னூலர்

சாதிகீத வர்த்தமானர்

சண்பை நகராரே. 10

721. வந்தியோடு பூசையல்லாப்

போழ்தின் மறைபேசிச்

சந்திபோதிற் சமாதிசெய்யுஞ்

சண்பை நகர்மேய

__________________________________________________

மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.

கு-ரை: மண்ணுண்ட மாலும் மலரோனும் அறியாவண்ணம் நின்ற இறையோன் சண்பைநகரார் என்கின்றது. எண் தான் அறியா - எள்ளளவும் அறியாத. வண்டு குவளைத் தேனை அருந்தித் தாமரையின் மகரந்தத்தை உண்டு பாடும் சண்பைநகர் என்க.

10. பொ-ரை: அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பை நகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.

கு-ரை: புறச் சமயிகள் இகழ்ந்து பேசினாலும் அவற்றைப் புகழாகக் கொண்டருளும் சண்பைநகரார் இவர் என்கின்றது. போதியார் - புத்தர். பிண்டியார் - சமணர். மாதி சித்தர் - அணிமாதி சித்திகளை உடையவர். சாதி கீத வர்த்த மானர் - சகாரம் முதலாகப் பாடப்படுகின்ற பாட்டில் நிலைத்திருப்பவர்.

11. பொ-ரை: அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப்