* * * * * * * * * * * * * * 7
718. இருளைப்புரையு நிறத்திலரக்கன்
றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா
ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர்
வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ்
சண்பை நகராரே. 8
719. மண்டான்முழுது முண்டமாலு
மலர்மிசை மேலயனும்
எண்தானறியா வண்ணநின்ற
விறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித்
தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ்
சண்பை நகராரே. 9
__________________________________________________
7. * * * * * * * * * *
8. பொ-ரை: அழகிய மணத்தோடு
மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை
போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும்
கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள்
போன்ற கரிய நிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை
அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.
கு-ரை: இராவணனை ஈடழித்து, ஈடேற்றும்
அம்மான் இவர் என்கின்றது. ஈடு - பெருமை. ஏரார் -
அழகிய. மருளைச்சுரும்பு பாடி - மருள் என்னும் பண்ணை
வண்டு பாடி. அளக்கர் - கடல். வரை ஆர் திரை - மலையொத்த
அலை. தரளம் - முத்து.
9. பொ-ரை: தண்டிலே மலர்ந்த குவளை
மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள
மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை
நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால்
தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர்
|