பக்கம் எண் :

770திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


நலமார்வெள்ளை நாளிகேரம்

விரியா நறும்பாளை

சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ்

சண்பை நகராரே. 5

717. மாகரஞ்சே ரத்தியின்றோல்

போர்த்து மெய்ம்மாலான

சூகரஞ்சே ரெயிறுபூண்ட

சோதியன் மேதக்க

ஆகரஞ்சே ரிப்பிமுத்தை

யந்தண் வயலுக்கே

சாகரஞ்சேர் திரைகளுந்துஞ்

சண்பை நகராரே. 6

__________________________________________________

மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.

கு-ரை: தான் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்தவர் சண்பையார் என்கின்றது. கொல்லை எருது - முல்லை நிலத்து இடபம். நாளிகேரம் - தென்னை. நாளிகேரம் வெள்ளை விரியா நறும் பாளைகரியின் மருப்புக்காட்டும் எனக்கூட்டுக. கரியின் மருப்பு - யானைக் கொம்பு. சலம் - வஞ்சனை. யானைக்கபடம் என்பது வழக்காதலின் சலமார் யானை என்றார்.

6. பொ-ரை: கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.

கு-ரை: யானைத் தோலைப் போர்த்துப் பன்றிக் கொம்பை அணிந்த சோதியான் சண்பையான் என்கின்றது. மா கரம் - பெரிய கை. அத்தி - யானை. சூகரம் - பன்றி. ஆகரம் - கடல். திரைகள் முத்தை வயலுக்கே உந்தும் சண்பை என்க.