பக்கம் எண் :

 66. திருச்சண்பைநகர்769


715. மொய்வல்லசுரர் தேவர்கடைந்த

முழுநஞ் சதுவுண்ட

தெய்வர்செய்ய வுருவர்கரிய

கண்டர் திகழ்சுத்திக்

கையர்கட்டங் கத்தர்கரியி

னுரியர் காதலாற்

சைவர்பாசு பதர்கள்வணங்குஞ்

சண்பை நகராரே. 4

716. கலமார்கடலுள் விடமுண்டமரர்க்

கமுத மருள்செய்த

குலமார்கயிலைக் குன்றதுடைய

கொல்லை யெருதேறி

__________________________________________________

கு-ரை: மன்மதனை எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் செய்தவன் சண்பையான் என்கின்றது. மகரத்து ஆடு கொடியோன் - மகர மீன் எழுதிய வெற்றி பொருந்திய கொடியுடையோன். நிகர் ஒப்பு: ஒருபொருட் பன்மொழி. தேவி என்றது இரதியை. அவளுக்கு மட்டும் மன்மதனை எழுப்பித் தந்ததை உணர்த்துவது. தாரா - சிறுநாரை. பகன்றில் - அன்றில். தகரப்புன்னை - தகரமும் புன்னையும்.

4. பொ-ரை: அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.

கு-ரை: நஞ்சமுது செய்த தெய்வர், செய்யர், கண்டங்கரியர், சுத்திக்கையர், மழுப்படையர் சண்பைநகரார் என அடையாளம் அறிவிக்கின்றது. கட்டங்கம் - மழு, சுத்தி - திருநீறு கொடுப்பதற்குத் தலையோட்டினால் இப்பிவடிவமாகச் செய்யப்பட்டது.

5. பொ-ரை: மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலை வளம்