பக்கம் எண் :

768திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மேதகஞ்சேர் மேகமந்தண்

சோலையில் விண்ணார்ந்த

சாதகஞ்சேர் பாளைநீர்சேர்

சண்பை நகராரே. 2

714. மகரத்தாடு கொடியோனுடலம்

பொடிசெய் தவனுடைய

நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய்

நீல கண்டனார்

பகரத்தாரா வன்னம்பகன்றில்

பாதம் பணிந்தேத்தத்

தகரப்புன்னை தாழைப்பொழில்சேர்

சண்பை நகராரே. 3

__________________________________________________

அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர். சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.

கு-ரை: உமையொருபாகர், செங்கமலப்போதில் வீற்றிருக்கும் புண்ணியனார் சண்பையார் என்கின்றது. சூதகம் சேர் - சூதாடுங் காயை ஒத்த. பங்கர் - பாகத்தையுடையவர். சுடர் கமலப் போது அகஞ்சேர் - ஒளிவிடுகின்ற செந்தாமரையில் எழுந்தருளியுள்ள. மேதகம் - மேன்மை. விண்ணார்ந்த - மேகநீரையுண்ட. சாதகம் - சாதகப்புள். பாளை நீர்சேர் - தென்னை கமுகு முதலியவற்றின் பாளைகளில் தேன் சேர்ந்த.

3. பொ-ரை: எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பை நகரில் விளங்கும் இறைவர், மகர மீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.