66. திருச்சண்பைநகர்
பண்: தக்கேசி
பதிக எண்: 66
திருச்சிற்றம்பலம்
712. பங்கமேறு மதிசேர்சடையார்
விடையார் பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு
மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர்
மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ்
சண்பை நகராரே. 1
713. சூதகஞ்சேர் கொங்கையாளோர்
பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார்
பூத கணநாதர்
__________________________________________________
1. பொ-ரை: மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை
உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு
முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை
ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய
இறைவர் கலை குறைந்த பிறை மதி சேர்ந்த சடையினர்.
விடைஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும்
ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.
கு-ரை: கூன்பிறையணிந்த சடையாரும்,
விடையாரும், வேதம் அங்கம் ஆனாரும் சண்பைநகரார்
என்கின்றது. பங்கம் - கூனல்; குற்றம் என்பாரும்
உளர். சிவன்சடை சேரத்தகும் பிறைக்குக் குற்றமின்மை
தெளிவு. வங்கம் - தோணி. பரதர் - செம்படவர். நுனைமூக்கின்
சங்கம் - கூரிய மூக்கினையுடைய சங்குகள். கடல் வாழ்
சங்கு பரதர் மனையேறி முத்தமீனும் என்றது பிறவிக்
கடலில் ஆழ்வாரும் வினைநீங்கும் காலம்வரின் சண்பைநகர்
சார்ந்து பேரின்பம் எய்துவர் என்று குறிப்பித்தவாறு.
2. பொ-ரை: வானகத்தே திரிந்து
வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய
மேகங்கள் பெய்த மழை நீர்
|