பக்கம் எண் :

766திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


தண்டுடுக்கை தாளந்தக்கை

சார நடம்பயில்வார்

பண்டிடுக்கண் டீரநல்கும்

பல்லவ னீச்சரமே. 10

711. பத்தரேத்தும் பட்டினத்துப்

பல்லவ னீச்சரத்தெம்

அத்தன்றன்னை யணிகொள்காழி

ஞானசம் பந்தன்சொற்

சித்தஞ்சேரச் செப்புமாந்தர்

தீவினை நோயிலராய்

ஒத்தமைந்த வும்பர்வானி

லுயர்வினொ டோங்குவரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

நடனம் புரிபவராய், அடியவர் இடக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.

கு-ரை: நிறையத்தின்று ஆடையின்றியே திரியும் சமணரும், ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும் கண்டறியாத இடம் இது என்கின்றது. முன்னிரண்டடியிலுள்ள உடுக்கை என்பது ஆடை என்ற பொருளிலும், மூன்றாமடியில் உள்ள உடுக்கை என்பது வாத்தியம் என்னும் பொருளிலும் வந்துள்ளன. இடுக்கண் - துன்பம்.

11. பொ-ரை: பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

கு-ரை: ஒத்தமைந்த - தம் இயல்புகளுக்கு ஏற்ப அமைந்த. சம்பந்தன் பல்லவனீச்சரத்துப் பல்லவனநாதரைத் தோத்திரித்த இப்பாடல் பத்தையும் மனம் ஊன்றிச் சொல்லும் மக்கள் தீவினையும் நோயும் இலராய் வானுலகில் வாழ்வார் என்கின்றது.