709. அங்கமாறும் வேதநான்கு
மோதுமய னெடுமால்
தங்கணாலு நேடநின்ற
சங்கரன் றங்குமிடம்
வங்கமாரு முத்தமிப்பி
வார்கட லூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே. 9
710. உண்டுடுக்கை யின்றியேநின்
றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார்
கண்டறி யாதவிடந்
_________________________________________________
கு-ரை: இராவணன் முடிகள்நெரியத் தாளூன்றிய
சங்கரன் ஊர் இத்தலம் என்கின்றது. தெற்றி எடுக்க
- கைகளைப் பின்னி எடுக்க. தார் அரக்கும் - மாலைகள்
அழுத்துகின்ற, அரக்குதல் - பதித்தல். கார் அரக்கும்
- மேகங்கள் முகக்கும். பாரர் அக்கம் பயில் புகார்
- மக்கள் உருத்திராக்கங்களைப் பயில்கின்ற
காவிரிப்பூம் பட்டினம்.
9. பொ-ரை: ஆறு அங்கங்களையும், நான்கு
வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும்
தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன்
தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும்
சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத்
தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில்
அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.
கு-ரை: வேதனும் நெடுமாலும் கண்ணால்
தேடநின்ற பெருமான் உறையுமிடம் இது என்கின்றது. கண்ணாலும்
என்ற உம்மை கருத்தால் தேட வேண்டியதை அவர்கள் அறியாமையால்
கண்ணால்தேட, அதற்கும் வெளிப்பட்டு நின்ற இறைவன்
என உயர்வைச் சிறப்பித்து நின்றது. வங்கம் - கப்பல்.
10. பொ-ரை: அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி
ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக்
கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில்
போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம்,
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த
|