பக்கம் எண் :

 68. திருக்கயிலாயம்783


734. புரிகொள்சடைய ரடியர்க்கெளியார்

கிளிசேர் மொழிமங்கை

தெரியவுருவில் வைத்துகந்த

தேவர் பெருமானார்

பரியகளிற்றை யரவுவிழுங்கி

மழுங்க விருள்கூர்ந்த

கரியமிடற்றர் செய்யமேனிக்

கயிலை மலையாரே. 2

735. மாவினுரிவை மங்கைவெருவ

மூடி முடிதன்மேல்

மேவு மதியு நதியும்வைத்த

விறைவர் கழலுன்னும்

தேவர்தேவர் திரிசூலத்தர்

திரங்கன் முகவன்சேர்

காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ்

கயிலை மலையாரே. 3

__________________________________________________

2. பொ-ரை: பெரிய களிற்றி யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை மலையில் விடம் உண்ட கரிய கண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

கு-ரை: இதுவும் அது. கிளிசேர்மொழி மங்கை - கிளியை யொத்த மொழியினை உடைய உமாதேவி. தெரிய - விளங்க. பரியகளிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கயிலை - பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறைய இருள்மிகுந்த கயிலை.

3. பொ-ரை: திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்தசுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்சயானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை