தென்றியிருளிற் றிகைத்தகரிதண்
சாரல் நெறியோடிக்
கன்றும்பிடியு மடிவாரஞ்சேர்
கயிலை மலையாரே. 5
738. தாதார் கொன்றை தயங்குமுடியர்
முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா
யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே. 6
__________________________________________________
பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற
பரம்பொருளாவார். தம் திருவடிகளை அடைய எண்ணும்
அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.
கு-ரை: ஒன்றும் பலவும் ஆய வேடத்தார்
- ஒன்றாயும் விரிந்து பலவாயும் ஆகிய வேடத்தை
உடையவர். கழல் சேர்வார் - திருவடியைத் தியானிப்பவர்கள்.
நன்று நினைந்து - பேரின்பத்தை விரும்பி. தென்றி -
சிதறி. திகைத்த யானை மலைச்சாரல் வழியாக ஓடி, கன்றும்
பிடியுமாக அடிவாரத்துச் சேரும் கயிலை என இயற்கை
எடுத்துக்காட்டப்பெறுகிறது.
6. பொ-ரை: கயிலைமலை இறைவர்,
மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும்
முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான
இடப்பாகமாக ஏற்ற தூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண்
வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும்
அருளிச் செய்தவர். வலக் காதில் குழை அணிந்தவர்.
வேத வடிவாய் விளங்குபவர்.
கு-ரை: தாது - மகரந்தம். போதார்
பாகம் - மெல்லிய இடப்பாகம். உலகின் மூதார் முனிவர்
- உலகத்தில் மிக வயது முதிர்ந்த முனிவராகிய சனகாதியர்.
|