பக்கம் எண் :

786திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


* * * * * * 7

739. தொடுத்தார் புரமூன் றெரியச்சிலைமே

லெரியொண் பகழியார்

எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து

மிடிய விரல்வைத்தார்

கொடுத்தார்படைகள் கொண்டாராளாக்

குறுகிவருங் கூற்றைக்

கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார்

கயிலை மலையாரே. 8

740. ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா

ரிலகு மணிநாகம்

பூணாணார மாகப்பூண்டார்

புகழு மிருவர்தாம்

__________________________________________________

7. * * * * * *

8. பொ-ரை: கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேருவில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண் டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.

கு-ரை: இராவணனை அடக்கி, வாள் கொடுத்தாண்டார் என்ற வரலாறு காட்டப்படுகிறது. எரிய, சிலைமேல், ஒண்பகழியார் தொடுத்தார் எனக்கூட்டுக.

படை - வாள். ஆளாக்கொண்டார் - அடிமையாக ஆட்கொண்டார். கடுத்து - கோபித்து.

9. பொ-ரை: கயிலை மலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணி