பேணாவோடி நேடவெங்கும்
பிறங்கு மெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங்
கயிலை மலையாரே. 9
741. விருதுபகரும் வெஞ்சொற்சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரு மொழியைக்கொள்ளார்
புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால்
இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங்
கயிலை மலையாரே. 10
__________________________________________________
களைக் கொண்டுள்ள நாகங்களை அணிகலனாகப்
பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள்
அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும்
விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து
நின்றவர்.
கு-ரை: உலகில் பலிஊணாக்கொண்டு
ஏற்றார் எனக்கூட்டுக.
பூண் நாண் ஆரமாக - பூணத்தகும் மாலையாக.
இருவர் - பிரம விஷ்ணுக்கள்.
10. பொ-ரை: தாம் பெற்ற விருதுகளைப்
பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய
கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய
சாக்கியரும் பிற சமயத்தவரோடு சண்டையிட்டுக்
கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு
அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார்பால்
இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம் பெருமையை நினைந்து
போற்றும் இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை
இறைவர்.
கு-ரை: விருது - பட்டங்கள். பொருது -
மோதுதல் காரணமாக. எருது ஒன்று உகைத்து - ஓர் இடபத்தில்
ஏறிச்செலுத்தி.
|