பக்கம் எண் :

 71. திருநறையூர்ச்சித்தீச்சரம்809


768. பின்றாழ்சடைமே னகுவெண்டலையர்

பிரமன் றலையேந்தி

மின்றாழுருவிற் சங்கார்குழைதான்

மிளிரு மொருகாதர்

பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை

பொருந்து செண்பகம்

சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச்

சித்தீச் சரத்தாரே. 4

769. நீரார்முடியர் கறைகொள்கண்டர்

மறைக ணிறைநாவர்

பாரார்புகழாற் பத்தர்சித்தர்

பாடி யாடவே

__________________________________________________

தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர்நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

கு-ரை: இதுவும் அவர் சடைமுடியர், வெண்ணீற்றர், புலித்தோலர் என்கின்றது. மூவா மேனி - மூப்படையாத, என்றும் இளைய திருமேனி. அதளர் - தோலை உடையாக உடையவர்.

4. பொ-ரை: பூசைக்குகந்த பொன் போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச் செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.

கு-ரை: இதுவும் அவர் தலைமாலை அணிந்தவர், கபாலி, சங்கக் குண்டலர் என்கின்றது. சங்கு ஆர் குழை - சங்கினால் இயன்ற காதணி. திருவார் நறையூர் - திருநறையூர்

5. பொ-ரை: உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடி ஆடத் தேரொடும் வீதிகளில் முழவின்