பக்கம் எண் :

810திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


தேரார்வீதி முழவார்விழவி

னொலியுந் திசைசெல்லச்

சீரார்கோலம் பொலியுநறையூர்ச்

சித்தீச் சரத்தாரே. 5

770. நீண்டசடையர் நிரைகொள்கொன்றை

விரைகொண் மலர்மாலை

தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப்

பவளத் தெழிலார்வந்

தீண்டுமாட மெழிலார்சோலை

யிலங்கு கோபுரம்

தீண்டுமதியந் திகழுநறையூர்ச்

சித்தீச் சரத்தாரே. 6

__________________________________________________

ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறை பொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.

கு-ரை: சித்தீச்சரத்தார் கங்கை முடியர், நீலகண்டர், மறைநாவர் என்கின்றது. பாரார் புகழ் - உலகம் முழுவதும் வியாபித்த புகழ்.

6. பொ-ரை: ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நரண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.

கு-ரை: இதுவும் அது. நிரை கொள் கொன்றை - சரமாகப் பூத்த கொன்றை.

தூண்டு சுடர் - ஒருகாலைக்கொருகால் மிகுந்து தோன்றும் ஒளி. பவளத் தெழிலார் - பவளம் போன்ற அழகினை உடையவர்.