771. குழலார்சடையர் கொக்கினிறகர்
கோல நிறமத்தம்
தழலார்மேனித் தவளநீற்றர்
சரிகோ வணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமே
லிசைத்து விடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார்
சித்தீச் சரத்தாரே. 7
772. கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன்
கயிலை மலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள்
நெரித்து மனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல
வுலப்பி லருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச்
சித்தீச் சரத்தாரே. 8
__________________________________________________
7. பொ-ரை: அழகு பொருந்திய
பாம்பினைப் புலித்தோல் ஆடை மேல் பொருந்தக்
கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும்
கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச் சித்தீச்சரத்து
இறைவர், மாதொரு பாகராதலின் கூந்தலும் சடையும்
அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர்.
அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர் சூடித் தழல்
போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை
அணிந்தவர்.
கு-ரை: அவர் கூந்தலையும் சடையையும்
உடையவர், கொக்கின் இறகை அணிந்தவர், கோவண
ஆடையர் என்கின்றது. குழல் - கூந்தல். கோலம் - அழகு.
தவளம் - வெண்மை. கீள் - கிழித்த ஆடை. புலம்ப - ஒலிக்க.
8. பொ-ரை: அலைகளோடு கூடிய நீர் நிலைகளால்
சூழப்பட்ட செல்வ வளம் மிக்க நறையூரில்
விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை
வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள
இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை
போன்ற தன்தோளால் பெயர்க்க முற்பட்டபோது,
தலைகளைக் கால் விரலால்
|