773. நெடியான்பிரம னேடிக்காணார்
நினைப்பார் மனத்தாராய்
அடியாரவரு மருமாமறையு
மண்டத் தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி
முதல்வா வருளென்னச்
செடியார்செந்நெற் றிகழுநறையூர்ச்
சித்தீச் சரத்தாரே. 9
774. நின்றுண்சமண ரிருந்துண்டேரர்
நீண்ட போர்வையார்
ஒன்றுமுணரா வூமர்வாயி
லுரைகேட் டுழல்வீர்காள்
__________________________________________________
நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல்
உரைகளால் இயன்ற பாடல்களைப் பாடிப் போற்ற, அளவிடமுடியாத
நல்லருளை வழங்கியவர்.
கு-ரை: இராவணனை அடர்த்து, அவன் சாமகானம்
பாட அருள்செய்தவர் இவர் என்கின்றது. வரையார் தோளால்
- மலையை யொத்த தோள்களால். உலப்பில் - வற்றாத.
9. பொ-ரை: திருமாலும் பிரமனும் தேடிக்
காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின்
மனத்தில் விளங்கித் தோன்றுபவராய், அடியவர்களும்,
அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும்,
தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி ‘முதல்வா
அருள்’ என்று வழிபடுமாறு செந்நெற் பயிர்கள்
புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச்
சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: அடியாரும் அமரரும் ‘முதல்வா!
அருள்’ என்று தோத்திரிக்க. இத்தலத்து எழுந்தருளியிருக்கின்றார்
என்கின்றது. நெடியான் - திருமால். நேடி - தேடி. பதவிகளில்
இருப்பார் தேடிக்காணாத பெருமான், தியானிப்பவர்கள்
மனத்தில் இருக்கின்றார் என எளிமை கூறியவாறு. செடி
- புதர்.
10. பொ-ரை: நின்றுண்ணும் சமணர்களும்,
இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச் சிறப்பொன்றையும்
அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும்
உரைகளைக் கேட்டு உழல் பவரே!
|