பக்கம் எண் :

824திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


இறையார்வந்தெ னில்புகுந்தென்

னெழினல முங்கொண்டார்

கறையார்சோலைக் கானூர்மேய

பிறையார் சடையாரே. 3

790. விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை

மாலை யதுசூடித்

தண்ணாரக்கோ டாமைபூண்டு

தழைபுன் சடைதாழ

எண்ணாவந்தெ னில்புகுந்தங்

கெவ்வ நோய்செய்தான்

கண்ணார்சோலைக் கானூர்மேய

விண்ணோர் பெருமானே. 4

____________________________________________________

பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இது முறையோ?

கு-ரை: கானூர்மேவிய பிறையார், சடையார், விடைமேல் வருவாராய் என் வீட்டில் புகுந்து என் நலத்தைக் கொண்டார் என்று தலைவி அறத்தொடு நிற்பதாக எழுந்தது, சிறை - சிறகு. மறை ஆர் பாடல் - தேவப்பாடல். மால்விடை - பெரிய இடபம். இறையார் - சிவன். எழில்நலம் என்பது எழிலும் நலமும் என உம்மைத் தொகை. கறை யார் சோலை - இருள் சூழ்ந்த சோலை.

4. பொ-ரை: இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறை மதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகியவற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க. என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரக வேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?

கு-ரை: வீட்டில் கன்னம்வைத்துப் புகுந்த கள்வனின் அடையாளங் கூறுவார்போலத் தலைவி, இல்புகுந்து எவ்வஞ்செய்த தலைவனின் கண்ணி அணி அடையாளங்கள் இவற்றைக் கூறுகின்