791. தார்கொள்கொன்றைக்
கண்ணியோடுந்
தண் மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு
சேட ராய்வந்து
ஊர்கள்தோறு மையமேற்றென்
னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய
கறைக்கண் டத்தாரே. 5
792. முளிவெள்ளெலும்பு நீறுநூலு
மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போ லையமென்றெ
னில்லே புகுந்துள்ளத்
____________________________________________________
றாள்.
விண் - ஆகாயம். கண்ணி - தலைமாலை. தண் ஆர் அக்கு -
குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை. எண்ணாவந்து
என் இல்புகுந்து எவ்வ நோய் செய்தான் - யான் அறியாமையால்
எண்ணாதிருந்த போதிலும், வலியவந்து இல்லில் புகுந்து
கலந்து பிரிந்த மிக்க துன்பத்தைச் செய்தான்; என்றது
ஆன்மா தலைவனை, தானே சென்று அடைதற்கும், கலத்தற்கும்,
பிரிதற்கும் என்றும் சுதந்திரமில்லாதன என்று அறிவித்தவாறு.
கண் - இடம்.
5. பொ-ரை: கருநிறம் பொருந்திய
சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர்,
கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை
அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி,
சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய்
வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என்
மனத்தகத்தே கொடிய விரக வேதனையைத் தந்து சென்றார்.
கு-ரை: பிச்சை ஏற்பார்போல் வந்து
என் மனத்திற்குப் பெரு நோய் செய்தார் என்கின்றது.
இதுவும் தலைவி கூற்று. தார் - மார்பின் மாலை. கண்ணி
- தலையிற்சூடப்படும் மாலை. சேடர் - காதலால் தூது செல்லும்
தோழர். உள் - மனம்.
6. பொ-ரை: தேன் பொருந்திய மலரில்
கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும்
திருக்கானூரில் மேவிய ஒளி
|