தெளிவுநாணுங் கொண்டகள்வர்
தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய
வொளிவெண் பிறையாரே. 6
793. மூவாவண்ணர் முளைவெண்பிறையர்
முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார்
பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம்
புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய
தேவ தேவரே. 7
____________________________________________________
பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய
இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும்
முப்புரி நூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக
வந்தவர் போல வந்து, ‘ஐயம் இடுக‘ என்று கூறிக் கொண்டே
என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும்
கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.
கு-ரை: இதுவும்; பிச்சை என்று
சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும்
நாணத்தையுங்கொண்ட கள்வர் இவர் என்கின்றது.
முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் தக்கவர்போல்.
உள்ளத் தெளிவும் நாணுங்கொண்ட கள்வர் என்றது தன்னுடைய
நிறையும் நாணும் அகன்றன என்பதை விளக்கியது. தேறல்
- தேன்.
7. பொ-ரை: தெய்வத்தன்மை வாய்ந்த
சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய
சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு
முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர்
கொன்றை மாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும்
புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து,
பொய் கலந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்து
போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில்
புக்கொளித்த புரிநூலர் ஆவார்.
கு-ரை: இவர் வரும்போது பிறைசூடி,
கொன்றை மாலையணிந்து, புன்சிரிப்புச் செய்து கொண்டே
வந்தார் , பல பொய்யைப்
|