பக்கம் எண் :

 73. திருக்கானூர்827


794. தமிழினீர்மை பேசித்தாளம்

வீணை பண்ணிநல்ல

முழவமொந்தை மல்குபாடல்

செய்கை யிடமோவார்

குமிழின்மேனி தந்தகோல

நீர்மை யதுகொண்டார்

கமழுஞ்சோலைக் கானூர்மேய

பவள வண்ணரே. 8

795. அந்தமாதி யயனுமாலு

மார்க்கு மறிவரியான்

சிந்தையுள்ளு நாவின்மேலுஞ்

சென்னியு மன்னினான்

____________________________________________________

பேசிக் கொண்டே போவார்போல என் மனத்தை மயக்கிப் புகுந்து கொண்டார் என்கின்றது. மூவா வண்ணர் - மூப்படையாத அழகை உடையவர். முறுவல் - காமக்குறிப்புத் தோன்றும் சிரிப்பு. பொக்கம் - பொய். உள்ளம் புக்க பிரிநூலர் என்றது புரிநூல் அணிந்ததற்கேலாத செயல் செய்தார் என்னுங்குறிப்பு. தேவு - தெய்வத்தன்மை; தேன்வார் சோலை என்றுமாம்.

8. பொ-ரை: மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயரா தவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.

கு-ரை: இவர் பல வாத்தியங்கள் முழுங்கப் பாடிக்கொண்டும் இனிமையாகப் பேசிக்கொண்டும் வந்தார்; வந்தவர் இடம் விட்டுப் பெயராராய் என்னுடைய அழகைக் கவர்ந்து கொண்டு குமிழம்பூ நிறத்தைக் கொடுத்துவிட்டார் என்கின்றது. தமிழின் நீர்மை - இனிமை. கோலம் - அழகு. பவளவண்ணரே என்றாள். அவர்மேனியின் நிறத்தில் ஈடுபட்டு.

9. பொ-ரை: மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந்தையாராகிய பெருமானார். அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும்