பக்கம் எண் :

828திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வந்தென்னுள்ளம் புகுந்துமாலை

காலையாடுவான்

கந்தமல்கு கானூர்மேய

வெந்தை பெம்மானே. 9

796. ஆமையரவோ டேனவெண்கொம்

பக்கு மாலைபூண்

டாமோர்கள்வர் வெள்ளர்போல

வுள்வெந் நோய்செய்தார்

ஓமவேத நான்முகனுங்

கோணா கணையானும்

சேமமாய செல்வர்கானூர்

மேய சேடரே. 10

____________________________________________________

ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளுகின்றார்.

கு-ரை: அயனுக்கும் மாலுக்கும் அறியப்படாத இறைவன் எனது சிந்தையிலும், நாவிலும், சென்னியிலும் திகழ்கின்றான். என் மனத்திற் புகுந்து காலையும் மாலையும் உலாவுகின்றான் என்கின்றது. அந்தம் ஆதி - முடிவும் முதலும்.

10. பொ-ரை: வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங்களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மன வேதனையைத் தந்தார்

கு-ரை: எலும்பு முதலியவற்றை அணிந்து வெள்ளை உள்ளம் படைத்தவர்போல வந்து கள்வராய் மனவேதனையைத் தந்தார் என்கின்றது. அவர்கொண்ட வேடத்திற்கும் செயலுக்கும் பொருத்த