797. கழுதுதுஞ்சுங் கங்குலாடுங்
கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற்
பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள்
சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார்
அல்ல லறுப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
மில்லை
என்றபடி ஓமம் - ஆகுதி, கோண் நாகனையான் - வளைந்த
பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன். சேமம் -
பாதுகாப்பு. சேடர் - கடவுள்.
11. பொ-ரை: பேய்களும் தூங்கும் நள்ளிரவில்
நடனம் ஆடும் கானூர் மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன்
போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப்
பாடல்கள் பத்தையும் பாடித் தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச்
சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு
செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.
கு-ரை: இத்தோத்திரங்களைச்
சொல்லித் துதித்து ஆனந்தத் தால் அழுதும் சிரித்தும்
நிற்பவர்கள் துன்பம் அறுப்பர் என்கின்றது. கழுது -
பேய் பொழுது - முப்பொழுதிலும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
அதன்மருங்கு கடந்தருளால்
திருக்கானூர் பணிந்தேத்தி
ஆன்ற
சைவ,
முதன்மறையோர்
அன்பிலா லந்துறையின் முன்னவனைத்
தொழுது போற்றிப்,
பதநிறைசெந்
தமிழ்பாடிச் சடைமுடியார் பயில்பதியும்
பணிந்து
பாடி,
மதகரட
வரையுரித்தார் வடகரைமாந் துறைஅணைந்தார்
மணிநூல்
மார்பர்.
- சேக்கிழார் |
|