பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்83


இவ்வாறு பிறர் கருத்துக்களும் ஒரோ வழிக்குறிப்பிடப்படுகின்றன.

இவ்வுரையாளருடைய உரை இயற்றும் ஆற்றலை ‘வண்டரங்கப் புனற்கமல மது’ - என்னும் இத்திருமுறை 60 ஆம் பதிகத்துக்கு இவர் எழுதியுள்ள சுவையான உரைகண்டு உணரலாம்.

இங்ஙனம் நுண்ணுணர்வினால் வரையப்பெற்ற இம்முதல் திருமுறைக் குறிப்புரையைத் தெளிவுகருதி வரையப்பட்டுள்ள பொழிப்புரையோடும் பயின்று எல்லோரும் முழுப்பயன் பெற இறைவன் அருளுவானாக. இவ்வரிய குறிப்புரையைப் புதிதாக வரையப் பெற்ற பொழிப்புரையோடு வெளியிட்டருளுகின்ற நம் குருமகாசந்நிதானத்திற்கு அடியேங்கள் எவ்வாறும் கைம்மாறு இலேம்.

_____