ஓட்டுகின்ற இருள்,
ஆணவமலம்,
42-2. அயன் மால் உருத்திரன் என முத்தொழிலைச்
செய்யும் மூவரையும் அதிட்டித்து நின்று தொழிற்படுத்தும்,
தன்னிடத்து ஒடுங்கிய உலகமாதியவற்றைப் புனருற்பவம்
செய்யுங்காலைச் சிவன் சக்தி என்னும் இருவருமாகி
இவர்களின் வேறாய் நின்று இயக்கும் பரசிவமுமாகி
வினை ஒய்ந்து ஆன்மாக்கள் பெத்த நிலையில் நில்லா
ஆகலின், தீவினைகள் நீங்கி நிற்கப் பரங்கருணைத்
தடங்கடலாகிய பரமன் நல்வினைகளை அவைகள் ஆற்ற
அருளுகிறான்.
76-1. ஆன்ம போதம் கழன்று சிவபோதத்தில்
நிற்பார் சொல்லுவனயாவும் சிவத்து உரையே ஆதலின்
‘எனதுரை தனதுரையாக’ என்றார்.
85-9. நாகத்து அணை இருந்தும் அணையிலேயே
அருகில் திருமகள் இருந்தும் மாலுக்குப் போகம்
கூடவேண்டுமாயின் இறைவன் போகியாய் இருந்தாலல்லது
பயனில்லை என்பது கூறப்பெற்றது.
113-5. இறைவன் தேர்ந்த ஞானியரையும்
தேடச் செய்து அவர்களுக்குப் பாலின் நெய்போலவும்,
தேடுவாரைத் தேடச் செய்து விறகின் தீப்போலவும்
தோன்றிநிற்பவன்.
131-1. சுவைகளும்
இசைகளும் எண்குணங்களும் வேதமும் முதலியன மாயாகாரியங்கள்
ஆதலின் அவற்றால் அறியப் பெறாதவன் ஆயினான்
இறைவன்.
16. பிறர் கருத்துக்
கூறல்:
1-1. கயப்பாக்கம் திரு. சதாசிவ
செட்டியார் இம்முதல் திருப்பாடலில், விடையேறி
- சிருட்டி. மதி சூடி - திதி; பொடிபூசி - சங்காரம்;
கள்வன் - திரோபவம்; அருள்செய்த - அநுக்கிரகம்
என்ற ஐந்தொழிலையும் குறிப்பிட்டு
விளக்கியுள்ளார் - என்கிறார்.
ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் தோடுடைய
செவியன் முதலான இறைவனுடைய எண்குணங்களாகிய சிறப்பியல்புகள்
உணர்த்துவன, பிரமபுரம் விடைஏறி, பொடிபூசி,
உள்ளம்கவர் கள்வன் என்பன இறைவனுடைய உருவம்,
அரு உருவம், அருவம் என்ற முத்திறத் திருமேனிகளையும்
உணர்த்துவன என்று குறிப்பிடுகின்றார் - என்கின்றார்.
|