15. சாத்திரக் கருத்துகள்:
1-4. என் உள்ளம் கவர்ந்தார் என்றது,
என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார்
போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார்.
3-3. முடிமன்னனைக் கண்டு பிடிஅரிசி
யாசிப்பாரைப் போலல்லாது வலிதாய நாயகரைத் தியானித்துக்
காமியப் பயனைக் கருதாதீர்கள். உய்யுநெறியைக்
கேளுங்கள். அப்போது அதற்கு இடையூறாகிய வினைகள்
நீங்கும். இன்பம் உண்டாகும் வினை நீங்குதல்
ஒன்றுமே இன்பம் என்பது
சித்தாந்த முத்தி
அன்றாதலின் நலமாமே என்று மேலும் கூறினார்.
6-6. உடன்பிறந்தே கொல்லும் பகையாய்,
தன்னையும் காட்டாது தலைவனையும் காட்டாது நிற்கின்ற
மூலமலப்பகையை வெல்லும் வீரனாதலின் இறைவனை மைந்த!
என்றார்.
11-2. தானாய் - ஒன்றாய், வேறாய்
- அவற்றின் வேறாய், உடனானான் - உடனாய் நிற்பவன்.
இறைவன் கண்ணும் ஒளியும், கதிரும் அருக்கனும்,
ஒளியும் சூடும்போல உயிர்களோடு கலந்து இருக்கின்ற
மூவகை நிலைகளையும் உணர்த்தியவாறு.
17-6. அறிவானும் அறியப்படும்
பொருளும் அறிவும் ஆகிய மூன்றும் தனி நிலையற்று ஒன்றாய்
இருந்து அறியும் பரம ஞானிகளுக்குச் சிவமாகிய தன்னை
அறியத்தக்க அறிவை அருளுவான். இறைவன் அறியுமாறு
செய்தாலன்றி ஆன்மாக்கள் தாமாக அறிந்து கொள்ளும்
ஆற்றல் இல்லன.
17-7. சொற்பொருள் போல இறைவன்
அம்மையோடு ஒன்றாய் இருக்கும் தன்மையும்
சொல்லும் பொருளும்போல அம்மையை வேறாய் வைத்து
விரும்பும் தன்மையும் உடையன்.
18-4. திருவடிகளைத்
தொழுதாலல்லது ஆன்மாக்கள் தம் அறிவான் அறியா.
19-1. பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு
முலைகளை உடைய உமாதேவியோடு இணைபவன் சிவன்.
19-3. ஒளிப் பொருளாகிய
சூரியனையும் வெறுத்து
|