35-1. விரிகோவணம் - ‘அற்றம் மறைப்பது
முன்பணியே’ - 3-371-1.
‘ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கும்மே’
- தேவாரம்.
43-1. ஒருமாதைத் தலையிலும் ஒருமாதைப்
பாகத்திலும் வைத்தும் கற்குடியார் பிரமசாரியே.
‘பவன் பிரமசாரியாகும்’.
52-7. மூன்றும் ஒன்றாகக்
கூட்டி ஓர் வெங்கணையால்.
எரி காற்று அரிகோல் - 1-11-6.
65-3. அயம் சேர்புணரி - அயம் -
பள்ளம். அயம்இழி அருவி கலி - 46.
57-4. தாழ்வுடை மனம் -
பணிந்த உள்ளம்
தாழ்வு எனும் தன்மை
(சித்தியார்)
60-3. கண்பு அகத்தின் -
சம்பங்கோரையின் நடுவில்.
‘களிறுமாய் செருந்தியொடு
கண்பு அமன்று ஊர்தர’ (மதுரைக்-122.)
இவ்வுரையில் மிகத்தேவைப்பட்ட
இடத்தன்றிப் பண்டை நூல் மேற்கோள்கள் இடம் பெற்றில.
14. வடமொழிச் சார்பு;
கர்ணாவதம்சம் (2-1) க்ருஷ்ண மிருகம்
(2-1) அரிஷட்வர்க்கம் (21-5) அணோரணியான் மஹதோர்
மஹீயான் - (61-6) முதலிய வடசொற்றொடர்கள் உரையில்
விரவி வருகின்றன. ரத்நம், ஸ்பரிசம்,
ரூபம் முதலிய தனிச் சொற்களும் பயில்கின்றன.
முதல் திருப்பாடல் உரையிலும், 22-7 உரையிலும்
வடநூல் மேற் கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
உரை ஆசிரியர் வடமொழியும் பயின்றவர் ஆதலின்
இன்னோரன்ன அவர் உரையுள் இடம் பெற்றுள்ளன.
|