பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்79


உருவம் ஆய எனவும், பிரித்துப் பொருள் செய்க.

111-3. இறைஞ்சி என்னும் செய்து என் எச்சத்தைச் செய என் எச்சமாக மாற்றி இறைஞ்சக் கமழும் காலன நகர் என முடிக்க.

பொருள் தெளிவு கருதி இங்ஙனம் சொற்றொடர்கள் முறைப்படுத்தப்பட்ட இடங்கள் பல இவ்வுரையில் சுட்டப்பட்டுள்ளன.

13. பண்டை நூல் மேற்கோள்கள்:

2-9. போகம்வைத்த பொழில் - தனிமகன் வழங்காப்பனி மலர்க்கா (புறநா. 33)

8-6. நிதானம் - பொன்.

நிதானம் - முற்காரணம் தூய்மை நியமம்

நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின் கயிறாம் - நானார்த்த தீபிகை.

9-2. கிடை - வேதம் ஓதும் கூட்டம்.

‘ஓதுகிடையின் உடன் போவார்’ (பெரிய. சண்டே - 17)

19-10. நமையல - வருத்தா.

நமைப்புறு பிறவிநோய் - சூளாமணி

நும்மால் நமைப்புண்ணேன் - தேவாரம்.

32-8. ஏ ஆர் சிலை - பெருக்கத்தோடு கூடிய கயிலைமலை.

ஏ பெற்றாகும். தொல். உரி. பெற்று - பெருக்கம்

ஏ கல் அடுக்கம் - (நற்றிணை 116)

33-8. விடத்தார் திகழும் மிடறன் - ‘கறைமிடறு அணியலும் அணிந்தன்று’ - (புறநா -1)