10-5. உரவம் -
உரகம் என்பதன் திரிபு.
17-5. குன்று என்பது குன்றளூர் என்பதன்
மரூஉ. எந்தாய் - எம் தாய் என்பதன் அண்மை
விளி; எந்தை என்பதன் விளி. எனவே எந்தாய்
என்பது தாயாகவும் தந்தையாகவும் உள்ள இறைவனை
விளித்தவாறு.
55-10. கொள்ளேலும் -
முன்னிலைப் பன்மை எதிர்மறை ஏவல் இஃது அருவழக்கு.
89-6. அயம்பெய்ய - அயம் -
ஐயம் என்பதன்
போலி.
103-4. துணையல், பிணையல்,
இணையல், கணையல் - நான்கினும் அல் சாரியை.
117-3. ஏ விளங்கும் நுதல் - ஏ - அம்பு.
அது வில்லைக் குறித்தது ஆகுபெயர்.
இத்தகைய இலக்கணக் குறிப்புக்கள் இன்னும்
சில உள.
12. செய்யுள் முடிபு முதலியன:
ஆற்றொழுக்காகப் பொருள் செய்ய இயலாத
சில பாடல்களில் உள்ள சொற்றொடர்களைப் பிரித்துத்
தனித்தனியே கூட்டிப் பொருள் செய்ய வேண்டிய நிலை
உள்ளது. அத்தகைய இடங்களை இவ்வுரையாசிரியர்
விளக்கியுள்ளார்.
6-5. பாடலும் முழவும் விழாவும் இடையறாத
மருகல் எனவும், மறையோர் பரவ நிலாவியமைந்த
எனவும், கொடிதடவும் மருகல் எனவும் இயைத்துப்
பொருள் காண்க.
32-5. வண்டு புகுந்து ஈண்டி, செம்மை
உடைத்தாய் இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன்
உறைகின்ற இடைமருது என வினை முடிபு செய்க.
32-9. மால்நயந்து ஏத்த எனப்பிரிக்க.
உறைகின்ற இடை மருது ஈதோ எற்றே எனக் கூட்டுக.
77-1. குன்று இரண்டு அன்னதோள்
எனவும், அன்று இரண்டு
|