பக்கம் எண் :

840திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


812. வண்டணைகொன்றை வன்னியுமத்த

மருவியகூவிள மெருக்கொடுமிக்க

கொண்டணிசடையர் விடையினர்பூதங்

கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்

பண்டிகழ்வாகப்பாடி யொர்வேதம்

பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்

வெண்பிறைசூடி யுமையவளோடும்

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 4

____________________________________________________

வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரங்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால்தேன் எங்கும் விம்மி வழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

கு-ரை: உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ்செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன், கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள்.

4. பொ-ரை: வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூத கணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

கு-ரை: கொன்றை முதலியவற்றை அணிந்த சடையராய், குடமுழா முதலியவற்றைப் பூதங்கள் வாசிக்க, இசையோடு வேதத்தைப் பாடுகிறவர் இவர் என்கின்றது. கூவிளம் - வில்வம். கொடுகொட்டி - ஒருவகை வாத்தியம். இது இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது. பண்திகழ்வாக - ஒரேஸ்வரத்தில்