பக்கம் எண் :

 75. திருவெங்குரு841


813. சடையினர்மேனி நீறதுபூசித்

தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்

கடைதொறும்வந்து பலியதுகொண்டு

கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்

படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி

யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து

விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 5

814. கரைபொருகடலிற் றிரையதுமோதக்

கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி

உரையுடைமுத்த மணலிடைவைகி

யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்

புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள்

புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த

விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும்

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 6

____________________________________________________

5. பொ-ரை: சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக் கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்த அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூத கணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.

கு-ரை: வீடுகள்தோறும் வந்து பிச்சை ஏற்று, கண்டவர் மனத்தைக்கவர்ந்து, உமையவளை ஒருபாகத்திருத்தியவர் இவர் என்கின்றது. தக்கைகொள்பொக்கணம் - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணி மூட்டை இட்டு - புறத்தோளில் தொங்கவிட்டு.

6. பொ-ரை: கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல்